இந்த ஆண்டின் முதல் ரொக்கெட் எதிர்வரும் 14ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் காலை 6 மணியளவில் PSLV-C52 ரொக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
1710 கிலோ எடை கொண்ட Risat-1A செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 529 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும்.
வேளாண்மை காடுகள் வளம், தாவரங்கள், பயிர்கள், மண்ணின் ஈரப்பதம், வெள்ளம் குறித்த துல்லியமான விவரங்களையும் படங்களையும் இந்த செயற்கைக் கோள் அனுப்பி வைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஒகஸ்ட் மாதத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.