உருமாற்றமடைந்த ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிராக பிரத்யேக தடுப்பூசியை தயாரிக்க, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
உலக நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிராக செயலாற்றும் வகையில் பிரத்யேக தடுப்பூசியை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
அந்த வகையில், ஒமிக்ரோனுக்கு எதிராக தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதிக்குமாறு சீரம் நிறுவனம் கடந்த 6ஆம் திகதி விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த முன்மொழிவுக்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
Novavax Inc உடன் இணைந்து, ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசியை பரிசோதனை செய்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.