நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதாக அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள வடகொரியாவிடம் ஆயுதம் வாங்கியமையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தெரிவித்த கருத்து மறைமுகமாக ராஜபக்ஷ அரசாங்கம் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்காவிற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இருப்பினும் வெளிவிவகார அமைச்சு அவரது குறித்த கருத்தை மறுத்துள்ளபோதும் தனிப்பட்ட வகையில் இதற்கு எவ்வித மறுப்பையும் பசில் ராஜபக்ஷ் வெளியிடவில்லை.
எனவே அமெரிக்க குடிமகனாக இருந்து அந்நாட்டின் தடைகளை மீறியமைக்காக அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.