இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்து 12 வருடங்கள் கடந்துள்ளபோதும் அதிகார பகிர்விற்கான நிலையான பொறிமுறை உருவாக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
தென்கொரியாவில் கடந்தவாரம் இடம்பெற்ற சமாதானம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே மைத்திரிபால சிறிசேன இதனை கூறினார்.
யுத்தம் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து அமைதி, சமாதானம், நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை உறுதிப்படுத்த பான்கி மூன் முன்னேற்றகரமான தீர்மானங்களை முன்னெடுத்தார்.
இருப்பினும் சர்வதேசம் எதிர்பார்க்கும் தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் எதிர்பார்த்த பலனைப் பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போது 12 வருடம் கடந்துள்ள நிலையில் இன்றும் நிலையான அதிகார பகிர்விற்கான பொறிமுறை வகுக்கப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.