வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 25 சதவீத வரி ஒருமுறை அறவிடப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் மேலும் 9 நிதியங்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 2,000 மில்லியன் அல்லது அதற்கு மேல் வருமானத்தை ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது 25% மேலதிக வரியை விதிக்க வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் இருந்தும் வரியை பெறும் முடிவுக்கு நிபுணர்கள், எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், EFP மற்றும் ETF உட்பட 11 நிதிகள் இந்த மேலதிக வரிக்கு உட்படுத்தப்பட மாட்டாது என அமைச்சரவைக்கு உறுதியளித்ததாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.