வாகன இறக்குமதிக்கான தடையை மீறி எந்த வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இரண்டு Cadillac Escalade சொகுசு கார்களை கனரக வாகனம் ஒன்று ஏற்றிச்சென்ற காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளிக்கும் போதே சுங்க பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா இதனைத் தெரிவித்தார்.
மேற்படி வாகனங்கள் கடுவெலயில் உள்ள முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக கொண்டுசெல்லப்பட்டதாக கூறியுள்ளார்.