முத்தலாக் தடைசட்டம் அமுலுக்கு வந்ததன் வாயிலாக, உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் குடும்பங்கள் பிரியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் திஹாத், ஜலான் மாவட்டங்களில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”முத்தலாக் தடை சட்டத்தால் இன்று உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் குடும்பங்கள் பிரிவை சந்திக்காமல் பாதுகாக்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தை தன் குடும்பத்தினருக்கு பிரித்து கொடுத்து கொள்ளை அடித்த சமாஜ்வாதி கட்சியிடம் மீண்டும் ஆட்சியை வழங்க வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.