குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்கும் இந்தியா, பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குவாட் அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இந்தியா குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்குகிறது. பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இந்தியா மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
தெற்காசியாவில் ஸ்திரமான தன்மை உருவாக வேண்டும். சுதந்திரமான இந்தோ-பசுபிக் பிராந்தியம் அமைய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா முன்னெடுக்கும்.
இதற்கு கூட்டணி நாடானா இந்தியாவுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.