உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கான சாத்தியம் உள்ளதாகவும் இதனால், மனித பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு தீர்க்கமாக பதிலளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தற்போது சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் துருப்புக்களை குவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
சில படைகள் மீளப்பெற்றுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள போதும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ரஷ்யா துருப்புக்களை மீளப் பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையென மேற்கு நாடுகளும் குற்றம் சுமத்தியுள்ளன.