எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் நோயாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் பிறழ்விற்கான அறிகுறிகள் தென்படாத காரணத்தினால் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத குறிப்பிட்ட சதவீத கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருப்பதால் மேலும் தொற்று பரவலாம் எனவும் எச்சரித்தார்.
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.