உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸ் மாகாணத்தில் மழலையர் பாடசாலையின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் அமைந்துள்ள மழலையர் பாடசாலையின் மீதே நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது, ஒரு ஆசிரியரும், காவலாளியும் காயம் அடைந்தனர். 32 குண்டுகள் நகரின் மீது விழுந்ததாகவும், ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாகவும், மின்சார விநியோகம் தடைபட்டதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்காவில் 20 குழந்தைகள் மற்றும் 18 பணியாளர்கள் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை யார் நடத்தியது என்று இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஆனால், ரஷ்யாவே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
எனினும், அதேவேளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினரா? அல்லது உண்மையிலேயே ரஷ்யா தான் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியதா? அல்லது வேறு யாரேனும் இந்த தாக்குதலை இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினரா? என பல்வேறு கேள்விகள் நிலவுகின்றன.
இந்த மாகாணத்தில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.