இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 175 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 36 இலட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் நாடு முழுவதும் 175 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 1.89 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 98 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.