ரஷ்யாவின் ஆத்திரமூட்டம் நடவடிக்கைகளுக்கு தமது நாடு பதிலளிக்காது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பிரதேசங்களில் ரஷ்ய ஆதரவுடைய கிளர்ச்சியாளர்களுடனான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் ராணுவத்திற்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூன்றாவது நாளாக நடந்த மோதலில் இரண்டு உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ள நிலையில் மொஸ்கோ இதனை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.
கிழக்கு பிராந்தியங்களில் படையெடுப்பதற்கு போலியான நெருக்கடியை ஏற்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
இருப்பினும் இவ்வாறான நடவடிக்கையால், உக்ரேனியர்கள் அச்சமடையவில்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.