ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் மறைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதான சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 26 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதப்படும் விடயங்கள் மாத்திரமே வெளிப்படுத்தப்படாமல் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னர் அது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அதனை வெளியிடுவதா? இல்லையா என்ற இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மேற்கொள்வார் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.