யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கு தேவைகளை கண்டறிதல் மற்றும் வளங்களை அடையாளப்படுத்தல் பற்றிய தொடர் பயிற்சியின் இறுதி நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது பிரதேச சபை மற்றும் நகரசபைகளைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பிரதேச சபை மற்றும் நகர சபைத் தவிசாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வு கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி பெண்களின் இயலுமையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம், சேர்ச் போர் கொமன்ட் கிரவுன்ட் நிறுவனம், மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆகியன இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு அமைத்திருந்தன.