அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர், குளோபல் ஸ்ரீலங்கா மன்றம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள இலங்கை அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர்.
ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் இன்று(திங்கட்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த சந்திப்பில் இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.