நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காலை 8.30 முதல் மாலை 5.30 வரை நேரத்திற்குள் சுழற்சி முறையில் 3 மணிநேரத்திற்கு மின்சாரம் தடைப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அவசியம் ஏற்படின், இரவு வேளையில் முன்னறிவிப்பு அற்ற 30 நிமிட மின் தடை அமுலாகும் என்றும் குறித்த ஆணைக்குழு கூறியுள்ளது.
மேலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் பாவனையை குறைக்க கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ள அதேநேரம் பல நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளமையால் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சாரம் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது.