உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போதே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு, அரசு இயந்திரம் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்துள்ளார்.
அதேநேரம் உக்ரைனில் சிக்கி தவிக்கும் அண்டை நாடுகள், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியா உதவி செய்யும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.