பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் அதனை ஆதரிக்கத் தயார் என பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே இச்சட்டம் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது என சுட்டிக்காட்டினார்.
யுத்த காலத்தில் இச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது என்றும் 12 வருடங்களின் பின்னரும் அது நடைமுறையில் இருப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு சார்பாக அமையும் என்ற காரணத்தினால் ர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அதனை இரத்து செய்ய வலியுறுத்திவருவதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.
ஆகவே இச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற மட்டத்தில் கொண்டுவரும் அனைத்து யோசனைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். (நன்றி கேசரி)