• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையின் அடையாளமாக திகழ்ந்த டக்ஸன் பியூஸ்லஸ்!

இலங்கையின் அடையாளமாக திகழ்ந்த டக்ஸன் பியூஸ்லஸ்!

shagan by shagan
2022/03/01
in இலங்கை
78 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டம் கால் பந்திற்கு ஒரு புகழ் பெற்ற மாவட்டம். இந்த மாவட்டத்தில் பல கால்பந்தாட்ட வீரர்கள் உருவாகியுள்ளனர்.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தின் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்று முக்கிய கால்பந்து வீரராக உருவாகி தனது முயற்சியினால் முன்னேறி, தேசிய கால்பந்து அணியின் நிரந்தர தடுப்பு வீரராக மாறியவர் டக்ஸன் பியூஸ்லஸ்.

தேசிய மட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எல்லோர் மனதிலும் இருக்கும்.

அவ்வாறான ஒரு கனவுடன் உயரப் பறந்த ஒரு குருவி தான் டக்ஸன் பியூஸ்லஸ்.

உள்ளூர் மட்டப் போட்டிகளாக இருந்தாலும் சரி, கழக மட்டப் போட்டிகளாக இருந்தாலும் தன்னை அடையாளப்படுத்திய கால்பந்து வீரன் டக்ஸன் பியூஸ்லஸ்.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மன்னார் பனங்கட்டுகொட்டு கிராமத்தில் பிறந்தவரே டக்ஸன் பியூஸ்லஸ்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அவர் தனது கல்வி பயணத்தை ஆரம்பித்தார்.

மன்னார் மாவட்டத்தில் பல கால்பந்தாட்ட வீரர்களையும், ஜம்பவான்களையும் உருவாக்கிய பாடசாலை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை.

தேசிய மட்டத்தில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிய பாடசாலை.

அந்த பாடசாலை உருவாக்கிய ஒரு கால்பந்தாட்ட ஜாம்பவான் தான் டக்ஸன் பியூஸ்லஸ்.

பாடசாலைக் காலத்தில் கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை தன்வசப்படுத்தியிருந்ததுடன், தனக்கான ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.

இவர் விளையாடும் கால்பந்தாட்ட போட்டிகளை பார்வையிட ஒரு ரசிகர் பட்டாளவே விளையாட்டு மைதானங்களில் அலைமோதிய வரலாறுகளும் உண்டும்.

பல்வேறு கழகங்களுடன் இணைந்து விளையாடி தனது சாதனைகளை நிலை நாட்டியவர் டக்ஸன் பியூஸ்லஸ்.

ஒரு விளையாட்டு வீரனுக்கு அப்பால் சாதனை வீரனாகவும் திகழ்ந்தார்.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் முக்கிய ஒரு புள்ளியாகவும் இவர் திகழ்ந்துள்ளார்.

இலங்கை அணியின் தடுப்புச் சுவராக திகழ்ந்து வந்த டக்ஸன் பியூஸ்லஸ் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.

கால்பந்து உலகக் கிண்ண போட்டியின் தகுதி கான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையினை அனைவருக்கும் வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த வருடம்இந்திய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் சிறந்த வீரருக்கான விருதினையும் தன் வசப்படுத்திக் கொண்டார்.

குறித்த போட்டி சமநிலையில் நிறைவடைவதற்கு முக்கிய காரணமாக டக்ஸன் பியூஸ்லஸ் திகழ்ந்தார்.

தனது திறமையினால் இலங்கை அணியில் இடம் பிடித்த டக்ஸன் பியூஸ்லஸ் மாலைதீவில் ஒரு விளையாட்டு கழகத்துடன் இணைந்து விளையாட அங்கு சென்றார்.

அங்கும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தான் எதிர்பாராத விதமாக கடந்த சனிக்கிழமை இவர் மரணமடைந்துள்ளதாக கிடைத்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்களும் அவரது நண்பர்களும் கூறுகின்றனர்.
இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையில்லை என்கின்றனர் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
தற்போது வரை அவரது மரணத்தினை மாலைதீவு பொலிஸார் தற்கொலை என அறிவித்திருந்தாலும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ இரங்கல் செய்தியில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மூலம் மாலைதீவு கால்பந்தாட்ட சம்மேளனம், மாலைதீவு அரசாங்கம், மாலைதீவு பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அவரது மரண விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், அவரின் மரணத்திற்கான உண்மை காரணத்தை கண்டறியுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திற்கும், இலங்கை நாட்டிற்கும் சர்வதேச ரீதியில் பெருமை பெற்று தந்த அந்த வீரனின் மரணத்தின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கை.

டக்ஸன் பியூஸ்லஸ்சிற்கு நாங்கள் விடை கொடுத்தாலும் அவரின் ஆரம்ப போராட்டம், முயற்சி, அதனூடாக கிடைத்த வெற்றி என்றும் எம் மனதில் இருந்து நீங்கப் போவதில்லை.

அவரைப் போன்று இன்னும் மன்னார் மாவட்டத்திலுள்ள வீரர்கள் அடையாளம் கண்டு அவர்களின் திறமைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

டக்ஸன் பியூஸ்லஸ்சின் இடத்தை நிரப்ப முடியாது விட்டாலும் அவர் பயணித்த பாதையில் எமது வீரர்கள் பயணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Next Post

உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பும் இந்தியா!

Related Posts

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்
இலங்கை

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!
இலங்கை

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

2026-07-17
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!
இலங்கை

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

2026-07-17
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!
இலங்கை

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

2026-07-17
ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா வெற்றி: தொடர் சமநிலையில் நிறைவு!

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா வெற்றி: தொடர் சமநிலையில் நிறைவு!

பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை – திஸ்ஸ விதாரண

கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் ஆதரிக்கத் தயார் - திஸ்ஸ விதாரன

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

0
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

0
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

0
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

0
ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

0
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

2026-07-17
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

2026-07-17
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

2026-07-17

Recent News

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

2026-07-17
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.