பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
சில விடயங்களை மூடி மறைப்பதற்காகவே அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீது அவசரமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் அண்மைய வெளிநாட்டு விஜயத்தை தொடர்ந்து அரசாங்கம் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறினார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் போப் பிரான்சிஸையும் சந்தித்து ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து கர்தினால் விவாதித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் மறைமுக பொறுப்பாளிகளா என்பதைத் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.