நாட்டில் நிலவும் மின்சார பிரச்சினை தொடர்பாக இன்றும் எரிசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நேற்றும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோது புதிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மின்சார பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளால் தெளிவூட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்றும் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் ஏனைய விடயங்கள் குறித்து அதிகளவில் அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு இருக்காது என கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த போதும் அரசாங்கம் மின்வெட்டை அமல்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.
திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்று (திங்கட்கிழமை) அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.
இதேவேளை, பாணந்துறை, ஹொரனை, களுத்துறை, மத்துகம, அம்பலாங்கொடை உள்ளிட்;ட இடங்கள் பலவற்றில் நேற்றிரவு திடீர் மின் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.