உக்ரைனில் மோதலில் இருந்து தப்பி வரும் அகதிகளை பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்க புதிய திட்டத்தை அமைக்க விரும்புவதாக பிரித்தானிய உட்துறை அமைச்சர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார்.
தி சன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில், ‘நான் இப்போது ஒரு மனிதாபிமான பாதையை உருவாக்குவதற்கான சட்ட விருப்பங்களை ஆராய்ந்து வருகிறேன். இதன் பொருள், உக்ரைனில் உள்ள மோதலில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவுடன் தொடர்பு இல்லாத எவருக்கும் இந்த நாட்டிற்கு வர உரிமை உண்டு’ என கூறினார்.
பிரித்தானியா ஏற்கனவே நாட்டில் குடும்பம் அல்லது விருப்பமுள்ள ஆதரவாளர்களுக்கு விசா திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால் அரசாங்கம் அதன் ஐரோப்பிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் போதுமான உதவி செய்யவில்லை என்று எதிர்க்கட்சி சட்டமியற்றுபவர்களால் விமர்சிக்கப்பட்டது.
இந்தநிலையில், கடந்த வாரம் போலந்து எல்லைக்கு சென்ற தனது சொந்த அனுபவத்தை மேற்கோள் காட்டி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.