இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 225.20 ரூபாயாகவும் விற்பனை விலை 229.99 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 294.06 ரூபாயாகவும் மற்றும் விற்பனை விலை 302.92.ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
அவுஸ்ரேலிய டொலரின் கொள்முதல் விலை 163.74 ஆகவும், விற்பனை விலை 170.15. ரூபாயாகவும் கனேடிய டொலரின் கொள்முதல் விலை 174.73 மற்றும் விற்பனை விலை 180.90 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.