தாக்குதலை நிறுத்த ரஷ்யா ஒப்புக்கொண்டதை அடுத்து, உக்ரைனின் இரண்டு பெரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பேருந்துகள் மற்றும் கார்களின் மூலம் சுமி மற்றும் கியூவ்வில் பல மக்கள் இடமபெயர்ந்து செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து தற்போது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 694 பேரில் இந்திய மற்றும் சீன மாணவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மரியுபோலில் இருந்து வெளியேறும் பாதையில் ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்தப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.