பண்டோரா ஆவணத்தில் அம்பலப்படுத்தப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
இரகசிய கொடுக்கல், வாங்கல் அடங்கிய பட்டியலில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஆகியோரது பெயர்களும் வௌியாகியிருந்தன
இதனை அடுத்து விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கை கடந்த வருடம் நவம்பர் மாதம் அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இலஞ்ச ஊழல்கள் பற்றிய ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுத்தது என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் பாண்ட்ரோ ஆவணங்களில் அம்பலப்படுத்தப்பட்ட விசாரணைகள் குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் விரைவில் நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.