கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
இதனை அடுத்து சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.
இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே வருகை தந்திருந்தபோதும் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இதேவேளை கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாடடில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.