நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்தவர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜெயக்குமார் சார்பில் பிணை விண்ணப்பம் கோரப்பட்ட நிலையிலேயே நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.
ஏற்கெனவே தி.மு.க. பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, வீதிமறியல் போராட்டம் என இரண்டு வழக்கில் நீபந்தனை பிணை வழங்கப்பட்ட நிலையில் மூன்றாவது வழக்கிலும் பிணை வழங்கப்பட்டமையினால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.