இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது
பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, பெங்களுரில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.
இலங்கை அணியின் பத்தும் நிஷ்ஷங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் உபாதை காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான அதே இந்திய அணியே இன்றும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




















