நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெறுவது மற்றும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 15 சிறப்பு சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.