ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் அதிகாரிகள் அதனைத் தடுக்கத் தவறியதால், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிஹாரரே, முர்து பெர்னாண்டோ, எல்.டி.பி தெஹிதெனிய, எஸ்.துரைராஜா, மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரி மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.