பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற பிலியந்தலை வைத்தியர் மற்றும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாகவும் இந்த விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் சமர்பிக்க மாற்றுத் திகதியை வழங்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு கோரியது.
இந்நிலையில் வழக்கு விசாரணையை29ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.