நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (திங்கட்கிழமை) சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வீழ்ச்சியடைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பு, ரூபாயின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க அரசாங்கம் அவர்களின் உதவியை நாடியாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, பொருளாதாரம் பற்றிய சமீபத்திய மதிப்பாய்வு மற்றும் பெப்ரவரி பிற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் அதன் பணிப்பாளரினால் கோடிட்டுக் காட்டப்பட்ட விடயங்கள் குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.
நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட நாடு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை உள்ளடக்கி குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது என நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
கையிருப்புகளை அதிகரிக்கவும் வளர்ச்சியை நிலையான பாதையில் கொண்டு செல்லக் கூடிய சாத்தியமான வேலைத்திட்டம் தொடர்பாக இலங்கை ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.