ஜம்மு – காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானோடு இணையாமல், நிபந்தனைகளின் அடிப்படையில் நம்மோடு இணைத்தது அம்மக்களுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இராணுவ ஆட்சியே நீடிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வரவுசெலவுக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,”ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்னும் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்துச் சிதறடித்தது இந்த அரசு செய்த இமாலயத் தவறு எனக் கூறியுள்ளார்.
குறித்த பகுதிகளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை அமைத்து அப்பகுதியைப் பார்வையிட அனுப்ப வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் அம்மக்களின் கருத்தறிய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.