ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
ஜனாதிபதியின் குறித்த விசேட உரை இன்று இலங்கை நேரப்படி இரவு 8.30க்கு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
டொலர் பற்றாக்குறை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆற்றவுள்ள உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதேவேளை அவரது உரையை கேட்பதற்காக நாட்டில் சுழற்சி முறையில் அமுலாக்கவிருக்கும் சுழற்சி முறையிலான மின்வெட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.