ரஷ்யாவின்படையெலுப்பை தொடர்ந்து தாம் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் போருக்குப் பின்னர் உக்ரைனை மீட்டெடுப்பதற்கு ரஷ்யா பணம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனும் நட்பு நாடுகளிடம் இருந்து நிதி கிடைக்கும் என்றும் வெளிநாட்டில் ரஷ்யாவின் சொத்துக்களை கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கியூவ் நகருக்கு விஜயம் செய்த செக் குடியரசு, போலந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று அண்டை நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நான்காவது சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஓரளவு முன்னேறியுள்ளன என்றும் மிகவும் யதார்த்தமாக ஒலிக்க தொடங்கியுள்ளன என்றும் உக்ரைனின் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.