பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
மாநிலங்களவையில் இது குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மேற்படி கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ” எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக அவற்றின் மீதான கலால் வரி கடந்த நவம்பர் 4-ஆம் திகதி முதல் பெற்றோல் விலையில் லிட்டருக்கு 10ரூபாயும், டீசல் விலையில் லிட்டருக்கு 5ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதிலும் இந்தியாவில் பெற்றோல், டீசலின் விலை உயர்த்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.