இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளடங்களாக ஒன்பது பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
விசேட பண்ட வரிச்சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளார்.
வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் தயிர், அப்பிள், திராட்சை, சீஸ் ஆகியவற்றின் விலைகள் அதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் ஆப்பிள் மீதான வரி 200 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் திராட்சை மீதான வரி 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் தோடம்பழத்திற்கான வரி 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாதுளை கிலோகிராம் ஒன்றிற்கான விசேட பண்ட வரி 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு கிலோ தயிருக்கான வரி 200 ரூபாவினாலும், பாலாடைக்கட்டிக்கான (சீஸ்) விசேட பண்ட வரி ஒரு கிலோவுக்கு 400 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.