கொரோனா உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் மேகாலயாவில் 877 பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பெற்றெடுத்த 61 பெண்கள் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மாநில அரசிடம் தேசிய மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியது. இது குறித்து அம்மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
குறித்த அறிக்கையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. பாதிப்பு இல்லாதோருக்கான பிரிவில் சேர்க்க பரிசோதனை அவசியம். ஆனால் கர்ப்பிணியர் பலரும் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர். தடுப்பூசியையும் ஏற்கவில்லை.
பிரசவ திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்களை கண்டிப்பாக மருத்துவமனைகளில் சேர வலியுறுத்தினோம். இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் வரவில்லை.
இதனால் முறையான மருத்துவ கவனிப்பு இல்லாதது, மரணத்திற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.