சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை 2.8 பில்லியன் டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கொழும்பு துறைமுக நகருக்குள் சீன நிறுவனங்கள் இதுவரை 1.05 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக சீனத் தூதுவர் கூறினார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீன முலீட்டு திட்டங்களின் மூலம் சுமார் 11,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.
அத்தோடு ஹம்பாந்தோட்டையில் உத்தேச முதலீட்டு வலயத்திற்குள் முதலீடு செய்வதற்கு சுமார் 43 நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்குவதற்கும் கடன் கோரப்பட்டதாக கடந்த வாரம் ஆதவன் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த ஆண்டு சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான கடனை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.