ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு நாளை மாலை 6.00 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசியம் இதில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசேட கூட்டத்திற்கு முன்னதாக, ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நாளை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.