பருப்பு மற்றும் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த கடன் தொகை கோரப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
சீனாவிடம் கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் டொலர் கடனில் 1.5 பில்லியன் டொலரை மருந்துகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கைத்தொழிலுக்கான மூல்பொருட்கள் இறக்குமதிக்காக செலவிடப்படவுள்ளது.
அத்துடன், ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையை, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்த பயன்படுத்த எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.
இதேவேளை மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இலங்கையிடம் கையிருப்பில் உள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம் இதுவரை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் இறக்குமதிக்காக வழங்கியுள்ளது என்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.