நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 30 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய அவசர உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பை கடுமையாக விமர்சித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஐரோப்பிய சபை அமர்விலும் கலந்துகொண்டு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளின்போது உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதுடன், தற்போதைய தடைகளை மேலும் இறுக்குவது பற்றியும் தனது நட்பு நாடுகளுடன் ஜோ பைடன் விவாதிக்கவுள்ளார்.
பின்னர், போலந்து செல்லும் ஜோ பைடன், அங்குள்ள அமெரிக்க படையினரை சந்தித்து பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.