துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டால் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் டொலரின் பெறுமதியே பொருட்களின் விலையை தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.