நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தெவடகஹ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அண்மையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் பேரீச்சம்பழமும் உள்ளடங்குவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டில் தற்போது பேரீச்சம்பழத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய மரபுகளுக்கு அமைய நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள் மூன்று பேரீச்சம் பழங்களை உணவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் இஸ்லாமிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 40 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் விவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
எனினும் நோன்பு காலத்திற்கு போதுமான பேரீச்சம்பழம் இல்லை என பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.