பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், பிரதமர் இம்ரான் கான் தனது அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் ‘மத அட்டையை’ பயன்படுத்தியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இம்ரான் கான் அரசாங்கம் அதன் இராணுவத்திற்கு எதிராக அதன் சமூக ஊடக குழு மூலம் ‘பிரசார பிரச்சாரத்தை’ ஆரம்பித்துள்ளதாகவும் அக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இஸ்லாத்தை கட்சி அரசியலுக்கு பயன்படுத்தியதற்காக கான் மீது பிலாவல் சாடினார், மேலும் மதீனா மாநிலத்தின் கோசங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்து 14 நாட்களுக்குள் சட்டசபை கூட்டத்தொடரை கூட்டவில்லை என எதிர்க்கட்சிகள் தேசிய சட்டமன்ற சபாநாயகர் ஆசாத் கெய்சரை கண்டித்துள்ளன. மேலும் அவர் அரசியலமைப்பின் 6ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிற்குப் பிறகு, ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா தலைமையிலான பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள், இம்ரான்கானை இராஜினாமா செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி, எதிர்க்கட்சியின் கோரிக்கையை விடுத்து இரண்டு வாரங்களுக்குள் கூட்டத்தொடரைக் கூட்டாமல் அரசியலமைப்பை மீறியதற்காக சபாநாயகர் அசாத் கெய்சரைத் கண்டித்துள்ளார்.
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காக கடந்த 25ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சபாநாயகர் முன்னெடுத்தருந்தார்.
பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. அவர்கள் இதனையடுத்தே அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டு எதிர்க்கட்சிகள் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.
இந்தத் தீர்மானம் 172 தேசிய சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட வேண்டும், மேலும் அந்த எண்ணிக்கையை தேசிய சட்டமன்றத்தில் கொண்டு வருவது மட்டுமல்லாமல், வாக்களிக்கும் நேரத்தில் அவர்கள் சட்டமன்ற அரங்கிற்குள்ளேயே இருப்பதை உறுதி செய்வதும் எதிர்க்கட்சிக்கு கடினமான பணியை எதிர்கொள்கிறது.
பிரேரணையின் மூலம் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டால், பாகிஸ்தானில் பிரதமருக்கு எதிராக இதுவரையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதமர் என்று வரலாற்றில் பதியப்படுவார்.