கொரியாவைப் போல உக்ரைனை இரண்டாகப் பிரிக்க ரஷ்யா முயல்வதாக உக்ரைன் நாட்டு ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் ராணுவ உளவுத் துறையின் தலைவர் கைரைலோ புடனோவ்,
‘உக்ரைனில் ‘வட கொரியா, தென் கொரியா’ போல ஒரு பிளவை உருவாக்க ரஷ்யா முயல்கின்றது. ரஷ்ய படையெடுப்பு பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மட்டும் புடின் கவனம் செலுத்திவருகிறார்.
இந்த இரண்டு பகுதிகளையும் ரஷ்யாவால் இணைக்க முடியுமானால், கொரிய போருக்குப் பிறகு நிகழ்ந்ததைப் போல இந்தப் பகுதியையும் உக்ரைனின் பிற பகுதிகளையும் பிரிக்கும் ஒரு கோட்டினை உருவாக்க புடின் முயல்வார். விரைவில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உக்ரைன் கொரில்லா தாக்குதலில் ஈடுபடும்.
ரஷ்யா தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் உள்ள பிரச்சனையே கிழக்கு உக்ரைனுக்கும் க்ரைமியாவுக்கும் இடையில் நில வழித்தடம் ஒன்றை உருவாக்கிப் பராமரிப்பதுதான். ரஷ்யாவுக்கு அதன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் தடையாக இருப்பது வெல்லமுடியாததாக இருக்கும் மேரியோபோல் நகரம்தான். ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக அப்படி ஒரு நாடு போன்ற ஒன்றை உருவாக்கிக் கொள்வது சாத்தியமற்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.