இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டணம் செலுத்தப்படாததால் அவர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்பலில் எவ்வளவு டீசல் உள்ளது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், கட்டணம் செலுத்தப்படும் வரை கப்டன் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்திருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளனர்.
கப்பலிற்கு கட்டணத்தை செலுத்துவோம் என ஜனாதிபதி உறுதியளித்துள்ள போதிலும் ஜனாதிபதியின் உத்தரவாதத்தை கப்பல் கப்டன் ஏற்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தனது கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தால் நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலையேற்படலாம் என அவர் அஞ்சுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையால் கட்டணங்களை செலுத்த முடியாததால் அந்த நிலையேற்படும் என அவர் கருதுகின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டணம் தயாராகிவிட்டது என அரசாங்கம் அறிவித்ததும் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.