மனிதாபிமான அடிப்படையில் மேலும் 10 ஆயிரம் டன் கோதுமையை அனுப்ப இந்தியா தீர்மானித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு பொருளாதார நெருக்கடி நீடித்து வருகின்றது.
இதனையடுத்து இந்தியா அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. இதன்படி மொத்தம் 50 ஆயிரம் டன் கோதுமையை அனுப்பி வைக்க இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது.
முதற்கட்டமாக 10 ஆயிரம் டன் கோதுமையை ஆப்கானுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும் 10 ஆயிரம் டன் கோதுமை இன்னும் சில நாட்களில் வழங்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.