நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும் உறவுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்துள்ளார் .
இன்று ( சனிக்கிழமை ) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வந்தபோது, கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த முற்பட்ட தாய்மார்கள், வயோதிபப் பெண்கள் மீது காவற்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நீதி கிடைக்க வேண்டியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை ) காலை 10 மணிக்கு யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கி செல்ல கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்டிருந்தமை குறிப்பிடதக்கது .